35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
சிறுவனை கடத்தி இளம் பெண் வேடமிட்டு... பாலியல் தொழில் ஈடுபடுத்திய கும்பல்... அதிர்ச்சி சம்பவம்...!!
சமூக வலைதளம் மூலம் சிறுவனிடம் பழகி கோவைக்கு கடத்தி, பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல் காவல் துறையினரிடம் சிக்கியது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுடன் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளான் . இந்நிலையில் கடந்த வாரம் சிறுவனிடம் பேசிய அந்த கும்பல் ஆசை வார்த்தை கூறி கோவைக்கு வருமாறு அழைத்துள்ளது. அந்த சிறுவனும் நெல்லையில் இருந்து கிளம்பி கோவைக்கு சென்றுள்ளான்.
சிறுவன் கோவை வந்து இறங்கியவுடன் சிறுவனை, ஒரு நபர் பள்ளபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 20 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு அங்கிருந்த ஒரு கும்பலிடம் சிறுவடை ஒப்படைத்துவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து சிறுவனுக்கு அந்த கும்பல் பெண்கள் உடையை அணிவித்து தலைமுடியை அலங்கரித்து இளம்பெண் போல் மாற்றியுள்ளனர். ஒரு வாரமாக அந்த சிறுவனை இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தி ஆண்களிடம் கட்டாய வன்புணர்வு செயல்களில் ஈடுபடுத்தி கொடுமை படுத்தியுள்ளனர்.
அதன் மூலம் அந்த கும்பல் பணம் சம்பாதித்துள்ளனர். மேலும் சிறுவன் வரும்போது அணிந்திருந்த இரண்டு பவுன் நகை, செல்போன் ஆகியவற்றையும் அவர்கள் பறித்து வைத்துக் கொண்டனர். இதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுவன், தனது தந்தைக்கு ரகசியமாக செல்போன் மூலம் ரகசியமாக தொடர்பு கொண்டு தன்னை காப்பாற்றுமாறு லொகேஷன் மற்றும் வாய்ஸ் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் சூலூருக்கு வந்த சிறுவனின் குடும்பத்தினர், குறிப்பிட்ட அந்த கும்பலை தேடி சென்ற போது அப்படி ஒரு சிறுவன் தங்களிடம் இல்லை என்றும், அந்த சிறுவனை பார்த்ததே இல்லை என்றும் கூறி அவர்களை அந்த கும்பல் திருப்பி அனுப்பிவிட்டது.
இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த கும்பலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் அந்த சிறுவன் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். இளம்பெண் வேடத்தில் இருந்த மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார்.
மேலும் சிறுவனிடமிருந்து பறித்த 2 பவுன் தங்க நகையையும், ரூ.20 ஆயிரத்தையும் அந்த கும்பல் திருப்பி கொடுத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த கும்பலிடம் மீண்டும் இதுபோல் செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.