கோயம்பேடு மார்கெட் மீண்டும் திறப்பு! துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல்!



koyambedu-market-will-open

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸானது தமிழகத்தில் நாளுக்கு நாள் பரவி வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஆரம்பத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து  கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில் அதனை தற்காலிகமாக மூடினர். பிறகு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது.

இதனையடுத்து கோயம்பேடு மொத்த சந்தையை திறக்க கோரி, காய்கறிகள் , பூ மார்க்கெட் மற்றும் பழக்கடைகள் உள்ளிட்ட வணிக சங்கங்களின் பேரமைப்பு  கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தது. 

koyambedu

இதனையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். இந்தநிலையில், தற்போது கோயம்பேடு சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். காய்கறிகள் மற்றும் பூ மார்க்கெட் மூன்றாம் கட்டமாக திறக்கப்படும் என்றும், முதற்கட்டமாக தானிய விற்பனை மார்க்கெட் செப்டம்பர் 18 ஆம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.