மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை: 52 வயது கணித ஆசிரியர் கைது.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாடியான் தெரு பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 52). விருதுநகர் - சிவகாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த பள்ளியில் 4 வயதுடைய சிறுமி யுகேஜி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் தெரிவிக்கவே, அவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அதனை தொடர்ந்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.