மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அறுவை சிகிச்சை மூலமாக பசுவின் வயிற்றில் இருந்த 65 கிலோ பிளாஸ்டிக், ஆணி, இரும்பு பொருட்கள் அகற்றம்..!
கன்றை ஈன்றும் கர்ப்பிணி போல காட்சியளித்த பசுவின் வயிற்றில் இருந்து 65 கிலோ எடையிலான பொருட்கள் அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரையில் உள்ள வடக்கு மாசிவீதியில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். கடந்த ஓராண்டுக்கு முன்னதாக பரமேஸ்வரன் கிர் இனத்தை சேர்ந்த பசுவை வாங்கியுள்ளார். பசு 2 மாதங்களுக்கு முன்னதாக கன்றையும் ஈன்றது.
கன்றை ஈன்ற பசுவின் வயிறு மீண்டும் கர்ப்பமாக இருப்பதை போல பெரிதாகவே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பரமேஸ்வரன், கால்நடை மருத்துவமனைக்கு பசுவை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, பசுவுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருப்பதாய் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அதனை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கவும் திட்டமிட்டனர்.
அதன்படி நடைபெற்று முடிந்த அறுவை சிகிச்சையில் பசுவின் வயிற்றில் இருந்த 65 கிலோ கழிவு பொருட்கள் எடுக்கப்பட்டன. பசுவின் வயிற்றில் பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள், ஆணிகள், நாணயங்கள் போன்றவையும் இருந்துள்ளன. பசு மற்றும் அதன் கன்று சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு நலமுடன் திரும்பியது.