சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
மனைவியிடம் தகராறு.. தட்டிக்கேட்டவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்களை, நாய்களை ஏவி விட்டு கடிக்க வைத்த கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை, கேம்பண்ணன் நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி செந்தாமரைச் செல்வி (வயது 45). இவர்கள் ஆலங்கொம்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உதயகுமார் என்பவர் ஆந்திராவில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
அத்துடன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுற்கு வந்து செல்வார். அதேபோல உதயகுமார் வந்தபோது, தனது மனைவியிடம் தகராறு ஏற்பட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது நடந்த சண்டையில், மனைவியின் உடை கிழிந்த நிலையில், அவரை அரை நிர்வாணமாக்கி வீட்டிலிருந்து வெளியில் துரத்தி விட்டுள்ளார்.
இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்களான செந்தாமரைச் செல்வி, 'ஏன் இப்படி செய்கிறீர்கள்?, கட்டிய மனைவியை துன்புறுத்துவது அநியாயம் இல்லையா'? என்று கேட்டுள்ளார். இதனால் கோபமுற்ற பயிற்சியாளர், தனது வீட்டில் வளர்க்கும் மூன்று நாய்களை ஏவி விட்டு அவரது மகள் நிவேதா மற்றும் அவரது உறவினர், அருகாமையில் வசிக்கும் லத்திகா ஆகிய 3 பேரையும் கடிக்க வைத்துள்ளார்.
நாய் கடித்து குதறியதால், படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக செந்தாமரைச் செல்வி சிறுமுகையில் உள்ள காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். பக்கத்து வீட்டார், அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாய் உரிமையாளரான உதயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.