96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நகையுடன் சேர்த்து உடையையும் கழட்டு! பலநாள் திருடன் அதிரடி கைது!
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரானா பாலியல் குற்றங்களும், திருட்டு சம்பவங்களுக்கும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் BE பட்டதாரி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த பெண்களை மிரட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்ததும், அவர்களிடம் இருந்து நகை, பணம் முதலியவற்றை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயலை சேர்ந்த, அறிவழகன், 29; பி.இ., பட்டதாரியான இவர் 2017ல் தனியாக வசிக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி, பலாத்காரம் செய்தும், அதோடு நகை மற்றும் பணத்தையும், கொள்ளையடித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சைதாப்பேட்டை போலீசார், அவனை கைது செய்தனர்.
சமீபத்தில், ஜாமினில் வெளிவந்த அறிவழகன் மீண்டும் தனது பழைய வேலையை தொடர ஆரம்பித்துள்ளான். அம்பத்துார், கொரட்டூர், அம்பத்துார் எஸ்டேட், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில், வீட்டில், தனியாக வசிக்கும் பெண்களை, கத்தி மற்றும் 'ஸ்குரூ டிரைவரை' காட்டி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
அதனையடுத்து பட்டரவாக்கம் மேம்பாலத்தில் பதுங்கி இருந்த அறிவழகனை, நேற்று முன்தினம், துப்பாக்கி முனையில், அம்பத்துார் எஸ்டேட் போலீசார் கைது செய்தனர்.