பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஏழ்மையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி.! கூடவே இருந்து குழிபறித்த நபர்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் போண்டாமணி. அவர் தற்போது சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நடிகர் போண்டா மணியின் உயிரை காப்பாற்ற நடிகர், நடிகைகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என சகநடிகரான பெஞ்சமின் கோரிக்கை விடுத்து சில தினங்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு தமிழக அரசு மற்றும் நடிகர்கள் என பல்வேறு தர்ப்பினர் உதவி செய்தனர். தற்போது நடிகர் போண்டா மணி சிகிச்சையில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு உதவுவது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் பழகி வந்துள்ளார்.
இந்தநிலையில், நடிகர் போண்டா மணியின் மனைவி மாதவி மருந்து வாங்கி வர கொடுத்த ஏடிஎம் கார்ட் மூலம் ராஜேஷ் பிரித்தீவ் நகை வாங்கி மோசடி செய்துள்ளார். இதனையடுத்து போண்டா மணியின் மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.