திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பகீர் சம்பவம்.! கள்ளக்காதலில் துரோகம்.! அண்ணியை தீர்த்து கட்டிய கொழுந்தன்.!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது அண்ணியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தை அடுத்துள்ள எப்போதும் வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி(35). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் வைரமுத்து உடல்நல குறைவால் மரணம் அடைந்து விட்டார். அதன் பிறகு அவரது மனைவி சின்னமணி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறார்.
கணவர் இறந்த பிறகு புதுப்பேட்டையில் குழந்தைகளுடன் வசித்து வந்தார் சின்னமணி. இந்நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக தனது சொந்த ஊருக்கு மகளுடன் சென்ற அவர் பொருட்களை வாங்கிவிட்டு ஊர் திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார் . அப்போது அங்கு வந்த வைரமுத்துவின் தம்பி ராஜேஷ் கண்ணன்(20) தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குழந்தையின் கண் முன்னே சின்னமணியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த சின்னமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தப்பி ஓடிய ராஜேஷ் கண்ணன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கணவர் இறந்த பிறகு சின்னமணி தனது கணவரின் தம்பியான ராஜேஷ் கண்ணனுடன் கள்ளக்காதலில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதன் பிறகு அவருக்கு வேறு சில ஆண்களுடனும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை ராஜேஷ் கண்டித்திருக்கிறார். அவரது பேச்சை மீறியும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் இந்தக் கொடூர கொலை சம்பவம் நடைபெற்றிருக்கிறது . இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.