பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய்..! தாயை கவனிக்க 120 கி.மீ மூச்சு வாங்க சைக்கிளில் வந்த மகன்! மனதை உருக்கும் சம்பவம்.!



Man ride by cycle 120 km to care illness mother

உடல்நலம் சரியில்லாத தனது தாய்யை கவனித்துக்கொள்ள அவரது மகன் திருச்சியில் இருந்து காரைக்குடி வரை சுமார் 120 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே எஸ்.ஆர்.பட்டணத்தை சேர்ந்தவர் கருப்பையா (50). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளன்னர். பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டுவிட்டு தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் தனது தாயுடன் திருச்சியில் குடியேறியுள்ளார் கருப்பையா.

இதனிடையே அவரது தாய் வள்ளியம்மாள் பக்கவாதத்தால் பாதிக்கப்படவே தனது தாய்யை மட்டும் அழைத்துக்கொண்டு காரைக்குடியில் இருக்கும் சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது தாய்யை பார்த்துக்கொண்டு அருகில் இருக்கும் அச்சகம் ஒன்றில் 300 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுவந்துள்ளார்.

Mysterious

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் திருச்சியில் இருக்கும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் கருப்பையா. தற்போது ஊரடங்கு என்பதால் தனது தாய்யை கவனித்துக்கொண்டிருந்த அவர் தனது குடும்பத்தை பார்க்க திருச்சிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வள்ளியம்மாளுக்கு உடம்பு சரி இல்லை என தகவல் வர திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு கிளம்பியுள்ளார் கருப்பையா. தற்போது போக்குவரத்துக்கு வசதி இல்லாததால், தன்னிடம் இருந்த மிதிவண்டியை எடுத்துக்கொண்டு காலை 7 மணியளவில் புறப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை அருகே வரும்போது சைக்கிள் பஞ்சரானதை அடுத்து 6 கிலோ மீட்டர் சைக்கிளை தள்ளி சென்று அங்கிருந்த கிராமம் ஒன்றில் சைக்கிளை பஞ்சர் ஒட்டிவிட்டு மீண்டும் காரைக்குடி புறப்பட்டுள்ளார் கருப்பையா.

ஒருவழியாக மாலை 7:00 மணிக்கு வீடு வந்து சேர்ந்து தாய்க்கு மீண்டும் பணிவிடை செய்தார். தாயை காக்கும் பொருட்டு 120 கி.மீ., சைக்கிளில் பயணித்து வந்த அவரது தாய்ப்பாசம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.