நாதக ஒரு பொழுதுபோக்கு மன்றம் - அமைச்சர் துரைமுருகன் கலாய்.!



Minister Duraimurugan on NTK 

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், 74.7% வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் இழந்தார்.

இந்த விஷயம் குறித்து செய்தியாளர்களை சந்திக்கையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஈரோடு இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி. 

இதையும் படிங்க: "மானமற்ற கூட்டம்., அரிப்பை தீர்க்க உரசி பார்க்கிறது".., - சீமானுக்கு எதிராக துரைமுருகன் காட்டம்.!

duraimurugan

நாதக பொழுதுபோக்கு மன்றம்

திமுக 75% வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளது, அங்குள்ள மக்கள் திமுகவின் வருகையை எதிர்பார்த்து வாக்களித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி, அதனைப்பற்றி கவலை கொள்ளவில்லை. அவர்கள் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சி ஒரு பொழுதுபோக்கு மன்றம்" என அமைச்சர் துரைமுருகன் கூறினார். 

இதையும் படிங்க: பெரியார் தொடர்பாக சீமானின் பேச்சு: அமைச்சர் சேகர் பாபு நிலை என்ன?.. பளீச் பேட்டி.!