நடிகையை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்; அதிரடி காட்டிய காவல்துறை.!
மகிழ்ச்சியான செய்தி.! சொன்னதை செய்யும் திமுக.! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது எப்போது.?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்தது. தேர்தல் அறிக்கையில் கூறியது போல் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட சில திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்புகளுக்காக இல்லத்தரசிகள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியாகும். இந்த அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிடுவார். எந்த குறையும் இல்லாமல், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.