Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
தனிமையில் இருந்த ஜோடி.. அண்ணா பல்கலை., பாணியில் 2 இளைஞர்கள் அடாவடி., அதிரடி கைது.!
திருவெண்ணைநல்லூரில் தனியாக பேசிய காதல் ஜோடியை 2 இளைஞர்கள் கும்பல் வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் கணவரை இழந்த கைம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கும், உறவுக்கார ஆண் நண்பர் ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, ஜோடியை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் ஜெகதீஷ் மற்றும் திலீபன் ஆகியோர் சேர்ந்து, வீடியோ எடுத்து மிரட்டி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி.. விழுப்புரத்தில் சோகம்.!
உல்லாசமாக இருக்க வற்புறுத்தி மிரட்டல்
ரூபாய் 1000 பணம் பறிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணை தொடர்பு கொண்ட நபர்கள், தங்களுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டுமென வற்புறுத்தி இருக்கின்றனர்.
இதனால் பதறிப்போன பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் ஜெகதீஸ் மற்றும் திலீபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் 19 வயதுடைய மாணவி, ஞானசேகரன் என்ற மர்ம நபரால் வீடியோ எடுத்து மிரட்டி வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நண்பனை கொன்று ஆற்றில் புதைத்த பயங்கரம்.. 4 மாதமாக கபட நாடகம்.. விழுப்புரத்தில் பயங்கரம்.!