Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
8 வயதில் நடக்குற சோகமா இது? மாரடைப்பால் பள்ளியில் பறிபோன உயிர்.!
பள்ளிக்குச் சென்ற சிறுமி மாரடைப்பால் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், படனகுப்பே கிராமத்தில் வசித்து வருபவர் லிங்கராஜு. இவரது மனைவி சுருதி. தம்பதிகள் இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதையும் படிங்க: சிக்ஸர் அடித்த வேகத்தில் மயங்கி சரிந்த வீரர்; கிரிக்கெட் விளையாட்டின்போது நடந்த சோகம்.!
இருவருக்கும் ஒரே ஒரு எட்டு வயதுடைய தேஜஸ்வினி என்ற மகள் இருக்கிறார். சிறுமி தற்போது அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயன்று வந்துள்ளார்.
மயங்கி விழுந்து மரணம்
இந்நிலையில், நேற்று சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமி மயங்கி விழுந்ததையடுத்து, ஆசிரியர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது, சிறுமி உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் சிறுமியின் உடல் காவல்துறையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, மாணவி மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புகார் கொடுக்க வந்த பெண்ணை பாத்ரூமூக்கு அழைத்து பாலியல் சீண்டல்; டிஎஸ்பி வீடியோ லீக்.!