#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய்விருந்து விழா நடத்த தடை.! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் மொய்விருந்து விழாக்கள். இந்த விழா தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா நடத்துவது வழக்கம். தற்போது கொரோனா சமயத்திலும் இந்த பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு மொய்விருந்து விழா நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மொய் விருந்து விழா நடத்துவதற்கு தடை விதித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேற்று உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருமணம், ஈமச்சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இவற்றைத் தவிர மொய் விருந்து போன்ற விழாக்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து விழா நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மீறி நடத்தினால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.