#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறுமி உட்பட 2 பெண்கள் தீக்குளித்து தற்கொலை: குடும்ப வறுமைக்கு தாயுடன் மகளும் பலியான சோகம்..!
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகேயுள்ள மேல சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவர் அதே ஊரில் வீட்டின் அருகே சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்துலெட்சுமி (26). இவர்தனியார் அச்சகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினரின் மகள் ஹேமாஸ்ரீ (8). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நல்லுசாமியின் பெட்டிக்கடையில், குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால், முத்துலட்சுமி அச்சகத்தில் வேலை செய்ததாக கூறப்படுகிறது. எனினும் வருமானம் குறைவாக இருந்ததால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்துள்ளனர். முத்துலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. குடும்ப சூழல் காரணமாக அவர் சிகிச்சை எதுவும் பெறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை நல்லுசாமி வெளியே சென்ற நிலையில், வீட்டில் முத்துலட்சுமியும் அவரது மகள் ஹேமாஸ்ரீயும் மட்டும் இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் தாயும், மகளும் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் அலறி துடித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வழியிலேயே சிறுமி ஹேமாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமையின் காரணமாக தாயும், மகளும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.