மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடித்து தள்ளிய மாமியார், போலீசில் புகார் அளித்த மருமகள்.!
வந்தவாசி பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் மற்றும் இவரது மனைவி தமிழரசி ஆவர். இந்த தம்பதிகளிடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 29.06.2023 அன்று மகேஷ்குமார் தமிழரசியை தாக்கி இருப்பதாக தெரிகிறது. கணவரின் இச்செயலால் ஆத்திரம் அடைந்த தமிழரசி இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு சென்ற மகேஷ்குமாரின் சித்தப்பாவின் மனைவி அமுதா என்பவர் புகார் கொடுக்க கூடாது என்று தடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழரசியின்கையை பிடித்து இழுத்து அமுதா தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தள்ளுமுள்ளில் ஏற்பட்ட சச்சரவில் வளையல் உடைந்து ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழரசி கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறி தழிழரசி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து, தமிழரசி போலீசில் நேற்று புகார் கொடுத்ததை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.