நாமக்கல் மாணவி கீதாஞ்சலி நீட் தேர்வில் முதலிடம்..! டாப் 10-ல் எத்தனை மாணவர்கள்.? எத்தனை மாணவிகள் தெரியுமா.?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் மாணவி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடந்தது.
இந்நிலையில், வருகிற 27-ம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், நேற்று (24-ம் தேதி) 2021 - 2022-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ். படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இந்த தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடமும், மாணவர் பிரவீன் 2-வது இடமும் பிடித்துள்ளனர். சென்னை அண்ணாநகர் எஸ்.கே.பிரசன் ஜித்தன் 710 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும்பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர்.