கிருமிகளை தானே இழுத்து அழிக்கும் புதிய கருவியை கண்டுபிடித்த புதுக்கோட்டை இளைஞன்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!



new-destroy-germs-equipment

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அடுத்து உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசந்தோஷ் என்ற இளைஞர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து முடித்துள்ளார். சிவசந்தோஷ் பழைய எலக்ட்ரானிக் பொருட்களை சேகரித்து பல கருவிகளை வடிவமைத்து இயங்க செய்துள்ளார். 

இவர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய சமயத்தில் நண்பனுடன் இணைந்து நண்பர்கள் உதவியுடன் யு.வி லைட் மூலம் கிருமிகளை அழிக்கும் கருவியை செய்துள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் காற்றில் பறக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை இழுத்து அழிக்கும் ஒரு கருவியையும், கொரோனா நோயாளிகள் படுத்திருந்த படுக்கைகள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் உள்ள படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தம் செய்யும் யு.வி. லைட் கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.

germs

இந்த கருவியை ஏ.சி. மெஷின் போல ஒவ்வொரு அறையிலும் பொறுத்திவிட்டால் அந்த அறைகளில் உள்ள கிருமிகளை இந்த கருவி தானே இழுத்து அழித்துவிடும். அதனால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். அதே போல யு.வி. லைட் மூலமே நோயாளிகளின் படுக்கைகளில் உள்ள கிருமிகளையும் ஆம்புலன்ஸ் படுக்கைளில் உள்ள கிருமிகளையும் அழித்து சுத்தம் செய்யும் உபகரணம் ஒன்றும் வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார் சிவசந்தோஷ். கிராமத்து இளைஞனின் கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.