#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சற்றுமுன்: நாளை அதிதீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல் - வானிலை மையம் தகவல்
நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது அடுத்த 24 மணிநேரத்தில் நிவர் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாளுக்கு கடும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக மாற இருப்பதாகவும், இந்த புயல் 25ஆம் தேதி பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நிவர் புயல் வலுவான புயலாக மாறியதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.