நிவர் புயல் கரையை கடக்கும்போது வீசப்போகும் காற்றின் வேகம் எவ்வளவாம் தெரியுமா? அடேங்கப்பா.. வானிலை ஆய்வு மையம் தகவல்



Nivar cyclone effect Air speed may be more than 100 to 120 KM

நிவர் புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவான நிவர் புயலாக மாற இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிவர் புயல் வரும் 25ஆம் தேதி பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் வரும் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.