#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இருள் சூழ்ந்தது.. கரையை நெருங்கும் நிவர் புயல்.. காற்றுடன் கொட்டி தீர்க்கும் கனமழை..
நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில் கடலூர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
நிவர் புயலானது தற்போது புதுவையில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் 15 பயலானது அதிதீவிர புயலாக வலுப்பெற்று கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இந்நிலையில் நிவர் புயல் இன்று இரவு காரைக்கால் மாமல்லபுரம் இடயே கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புயல் கரையை நெருங்கிவருவதால் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், இருள் சூழ்ந்தாற்போல் காட்சி அளிக்கிறது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடுமையான காற்று வீசக்கூடும் என்பதால் கடலூர் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தாலும் உடனே புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.