8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
நிவர் புயல் கரையை கடந்தால் மட்டும் போதாது.. அதன்பிறகு அடுத்த 6 மணி நேரத்திற்கு தாக்கம் இருக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்திற்கு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளது. நிவர் புயல் தற்போது மணிக்கு 16 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயலின் பாதையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்பதால் நிவர் புயல் இன்று இரவு 8 மணியளவில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்க இருக்கும் நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்துவருகிறது. மேலும் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 140 கி.மீ வரை இருக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதேநேரம் புயல் கரையை கடந்து சென்றாலும் கூட அதன் தாக்கம் அடுத்த 6 மணி நேரம் தொடரும் எனவும், அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.