"முதல்வர் பதவி விலகுக" - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் காட்டம்.!



O  Panneerselvam on Kallakurichi Tragedy 

 

திமுக அரசு தோல்வி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்களில் 36 பேர் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி பலியாகினர். இவர்களின் உடல் அடுத்தடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 80 க்கும் அதிகமானோர் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ளுமுன் செய்தியாளர்களை சந்தித்தகழக தொண்டர்கள் மீட்பு அணி ஓ.பன்னீர் செல்வம், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகத்தையே உழுகிறது. கள்ளச்சாராயத்தை கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. இதற்கு முழு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். 

உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிகிச்சை பெறுவோருக்கு நவீன சிகிச்சை அளிக்க வேண்டும். தமிழக மக்கள் வருந்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்" என தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்; வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வழக்கு.!

இதையும் படிங்க: கையாலாகாத திமுக அரசின் செயல்பாடு.. துறை அமைச்சரின் பதவியை பறியுங்கள் - மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் கடும் கண்டனம்.!