மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருடர்களுக்கு பயந்து மூதாட்டி போட்ட பக்கா பிளான்.. இறுதியில் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்..! தப்பித்தவறியும் இப்படி செஞ்சிடாதீங்க..!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, ஈசானி தெருவில் வசித்து வரும் பெண் அன்பழகி. இவர் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் உள்ள பீரோவை திருடர்கள் யாரும் திருடாத அளவுக்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது.
உறங்குவதற்கு முன்பு அதற்கான மின் இணைப்பை கொடுத்துவிட்டு பின்பு காலையில் அதனை துண்டிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் பீரோ அருகில் சென்ற அன்பழகி மின் இணைப்பை துண்டிக்காமல் பீரோவுக்கு அடியில் இருந்த பொருளை எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அவரின் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடர்களுக்கு பயந்து இதுபோன்ற செயலை செய்தால் இறுதியில் தன் உயிர் மட்டுமல்லாது தனது குடும்பத்தினர் உயிரும் போக வாய்ப்புள்ளது. எனவே யாரும் இந்த தவற்றை மறந்தும் செய்துவிடாதீர்கள்.