மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை! ப.சிதம்பரம்!
மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக பா.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனை இட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இன்று காலை ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் ஐஎன்எக்ஸ் வழக்கில் நான் தப்பியோட அவசியம் இல்லை. அதே போல முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் சேர்க்கப்படாத போது, எப்படி எனது முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.