அச்சச்சோ.. 7 மாத பிஞ்சின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய பிளாஸ்டிக்.. சாதுர்யமாக செயல்பட்டு மறுவாழ்வு அளித்த கோவை மருத்துவர்கள்.!



Plastic stukked in 7 month baby nose

சிறுகுழந்தைகள் தொண்டையில் பிளாஸ்டிக் சிக்கிக்கொண்ட நிலையில், மூச்சுத்திணறலால் பரிதவித்த குழந்தையை பெற்றோர் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் உயிர் காப்பாற்றப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, நெகமம் கிராமத்தை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது, குழந்தையின் மூச்சுக்குழாய்யில் பிளாஸ்டிக் பொருள் சிக்கியுள்ளதை அறிந்துள்ளனர். இதனையடுத்து, குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாத மருத்துவர்கள், அதனை இலாவகமாக வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து, மருத்துவர்கள் உள்நோக்கு கருவி மூலமாக அறுவை சிகிச்சை இல்லாமல் பிளாஸ்டிக் பொருளை அகற்றினர். இதனால் குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டது. குழந்தை தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.