பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்! அரசு எடுத்த அதிரடி முடிவு!



pollachi-case-transfered-to-cbi

நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது இந்த பொள்ளாச்சி சம்பவம். பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று காலை உத்தரவு பிறப்பித்தார்.

இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இவர்களால் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், மருத்துவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என பல தரப்பு பெண்கள் பாதிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அரசியல் கட்சிகள் தொடர் வலியுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டது.

Pollachi Rapists

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உத்தரவில் சதீஷ், வசந்த் குமார், சபரிராஜன் இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை கோவை மாவட்ட காவல்துறை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கினை இன்று காலை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது இந்த வழக்கை CBI க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.