ரேஷன் கடைகளில் இன்று முதல்... பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம்..!!



Pongal gift set token distribution in ration shops from today..

தமிழகம் முழுவதும், இன்று முதல் பொங்கல் பரிசு தொகப்பான, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொருட்களை பெறுவதற்கான டோக்கன்  வினியோகிக்கப்படுகிறது. 

பொங்கல் பண்டிகை 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில். இந்த வருட பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ஆகியவை வழங்கப்பட இருக்கிறது. 

வருகிற 9-ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அன்று தமிழகத்தின் அனைத்து நியாய விலை கடைகளிலும் ரூ.1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான டோக்கன் வழங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இருக்கும். அதைக் காட்டி நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம். 

டோக்கன்கள் 3-ஆம் தேதியான இன்று முதல் 8-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அன்று டோக்கன் வழங்கப்படாது. ஒரு நாளுக்கு 200 டோக்கன்களை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்குவார்கள்.