திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன்; நினைவிடத்தில் வைத்து மனைவி பிரேமலதா மரியாதை.!
டெல்லியில், குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா 2-ம் கட்டமாக கடந்த மே 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதினை வழங்கி பெருமைப்படுத்தினார்.
நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கான விருதினை அவரது மனைவி பிரேமலதா நிகழ்ச்சியில் பங்கேற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றுகொண்டார். தொடர்ந்து டெல்லி தமிழ் சங்கம் சார்பில் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது; நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி.!
நினைவிடத்தில் மரியாதை
அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பியுள்ளார். பின்னர் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற அவர் அங்கு பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்பொழுது உடனிருந்த நடிகர் விஜயகாந்தின் மகன்களும் கண்கலங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு கிடைத்த கவுரவம்.! குடியரசுத் தலைவரிடம் பெற்றுக் கொண்டார் பிரேமலதா!!