வீட்டு பாதைக்கு சண்டை; பெண் காவலரின் அதிர்ச்சி செயலால் பெண் கடிதம் எழுதிவைத்து தற்கொலை..!



pudukkottai-keeramangalam-girl-suicide-neighbors-tortur

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், மேற்பனைக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் நீலகண்டன். இவரின் மனைவி கோகிலா (வயது 35). இவரின் அண்டை வீட்டில் வசித்து வருபவர் கண்ணையா. இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டு பாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் கண்ணையா அளித்த புகாரின் பேரில் கோகிலா கைது செய்யப்பட்டார். 

இவர் நிபந்தனை ஜாமின் பெற்று வந்துள்ள காரணத்தால், தினமும் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்திருக்கிறார். இதற்கிடையே, நேற்று முன்தினத்தில் கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், அவரின் தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர்.

pudukkottai

அந்த கடிதத்தில், எனது மரணத்திற்கு மேற்பனைக்காடு குமார், அவரின் மனைவி புவனேஸ்வரி காரணம் என்று எழுதியுள்ளார். இதில், புவனேஸ்வரி காவலர் ஆவார். இவர்களுக்குள் இருந்த பிரச்சனையில் கோகிலாவை சிறைக்கு அனுப்ப குமார், புவனேஸ்வரி, கீரமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், பெண் காவலர் கிரேசி ஆகியோர் உடந்தையாகவும் இருந்ததாக தெரியவருகிறது. 

அவர்களின் பெயரை குறிப்பிட்டு எனது மரணத்திற்கு அவர்களே காரணம் என்று கோகிலா தெரிவித்துள்ளதால், கோகிலாவின் கணவர் நீலகண்டன் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் உட்பட 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.