மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தை ஸ்தம்பிக்கவைக்கப்போகும் மாபெரும் போராட்டம்.. இனி அது நடக்காது.. - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி..!
ஆட்சியாளர்கள் காவல்துறையை பயன்படுத்தி புதிய தமிழகம் கட்சியின் செயல்பாடுகளை முடக்குவதாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "தமிழ்நாடு அரசு மின்கட்டண உயர்வை கைவிட புதிய தமிழகம் சார்பில் 4 கட்ட போராட்டம் நடைபெறும். முதற்கட்டமாக 22 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து, மாவட்ட தலைநகரம், ஊராட்சி என அணைத்து ஊர்களிலும் வாரம் ஒருமுறை போராட்டம் நடைபெறும்.
தமிழக அரசு மின்சார கட்டணத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். புதிய தமிழகம் கட்சிக்கு மட்டும் எதிர்ப்புகள் நூதன முறையில் நடைபெறுகிறது. எங்களின் செய்திகள் வெளியே வருவதில்லை.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி இருசக்கர பேரணிக்கு அறிவித்து அனுமதி கேட்டபோது அனுமதி கொடுக்கவில்லை. போதைப்பொருள் ஒழிப்பு விசயத்திற்கு கூட அனுமதி இல்லை. காவல்துறையை பயன்படுத்தி கண்களுக்கு தெரியாமல் எங்களின் நடவடிக்கை ஒதுக்கப்படுகிறது. இனியும் அதுபோன்றவை கூடாது" என்று பேசினார்.