பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடடா மழைடா..! அடை மழை டா..! அடுத்து சில மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டி தீர்த்தது. அவ்வப்போது வெயில் தலை காட்டினாலும் திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வருகின்ற 12-ம் தேதி அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் காஞ்சிபுரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமானது முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.