புயல் இல்லை ஆனால் மழை இருக்கு! தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து சுட்டெரிக்கும் வெயில் ஆனது மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனை தொடர்ந்து இந்தியப் பெருங்கடல்-வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 36 மணி நேரத்தில் அது புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தில் 30 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது.
ஆனால் அதன் பின்னர் புயல் சென்னையில் கரையைக் கடக்காது என்றும் வட மேற்குப் பகுதியை நோக்கி நகர்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழக மக்கள் மழை பெய்யப்போகிறது என நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் தமிழகத்தில் நேற்று முதல் வெப்பநிலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஃபானி புயல் நாளை தீவிர புயலாக மாறும் எனவும், நாளை மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது.