தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நாளை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.!
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று முதல் 6-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாகே ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வானிலை மையம் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளையும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நாளை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.