மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணப்பெண்ணை அழைத்துவரச்சென்ற மணமகன் வீட்டார் 9 பேர் ஆற்றில் மூழ்கி பலி..!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்வாரா பகுதியில் இருந்து, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி நகருக்கு மணமகளை அழைத்துவர மணமகனின் வீட்டார் 9 பேர் இரவில் காரில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள கோட்டா நயபுரா பகுதியில் செல்கையில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாம்பல் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளிக்க, இரவு நேரம் என்பதால் விபத்து குறித்த தகவலே நீண்ட நேரம் கழித்து காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், கிரேன் உதவியுடன் காரை மீட்டுள்ளனர்.
அப்போது, காரில் இருந்த 7 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றில் மிதந்த 2 பேரின் சடலத்தையும் மீட்டனர். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.