பிட் வச்சிருக்கியா? சோதிப்பது போல பாலியல் தொல்லை... தேர்வெழுதி கண்ணீருடன் வந்த மாணவிகள்.. திருப்பூரில் பயங்கரம்.!



in Tiruppur a Teacher Arrested Under Pocso 


தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், நேற்றுடன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நிறைவுபெற்றன. இதனால் மாணவ - மாணவிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகள், தனியார் பள்ளி மாணாக்கர்கள் தேர்வெழுதினர்.

வகுப்பு ஒன்றில் தனியார் பள்ளி மாணவிகள் 6 பேர், 5 மாணவர்கள் என 11 பேர் மட்டும் தேர்வெழுதி இருந்தனர். தேர்தல் கண்காணிப்பாளராக தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமார் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இவர் மாணவிகள் பிட் ஏதும் வைத்துள்ளனரா? என சோதிப்பது போல சில்மிஷம் செய்து இருக்கிறார். 

பாலியல் தொல்லை

ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையை தாங்கிக்கொண்டு தேர்வெழுதிய மாணவிகள், தேர்வு நேரம் முடிந்ததும் வகுப்பறையில் இருந்து வெளியேறி, பெற்றோர் மற்றும் பிற ஆசிரியர்களிடம் பாலியல் சீண்டல் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: உயிரிழந்தும் பலரின் உடலில் வாழும் கல்லூரி மாணவர்; உடல் உறுப்பு தானம்.!

Tiruppur

போக்ஸோவில் கைது

விரைந்து வந்த அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் தேர்வு தொடங்கியதில் இருந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் அம்பலமானது. இதனையடுத்து, அம்மாபாளையம், இராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் சம்பத் குமாரை காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது, திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வரும் சம்பத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகவே, காவல்துறையினர் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து சம்பத் குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நம்ம திருப்பூரில் இப்படியா? மெடிக்கலில் மருந்து வாங்கியபடி உயிரைவிட்ட இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!