டீ பிரியர்களே.. உங்களுக்கு தெரியுமா? ஷாக் தகவல் இங்கே.!



Tea Disadvantages 

 

இன்றளவில் டீ குடிக்கும் பழக்கம் என்பது பலருக்கும் ஏற்பட்டுவிட்டது. சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் வெளியூரில் தங்கி படிக்கும் பலருக்கும், டீ-யே ஒருநேர உணவாகவும் மாத இறுதிகளில் மாறுகிறது. டீ குடிப்பது உற்சாகம் தருவது போல உணர்வை ஏற்படுத்துகிறது. பலரும் உடல் சோர்வை கட்டுப்படுத்த டீ குடிக்கின்றனர். டீயை அவர்கள் ருசித்து, விரும்பி பருகின்றனர். 

ஐசிஎம்ஆர் பரிந்துரை

அதேநேரத்தில், அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது, உடலில் இரும்புசத்து குறைபாடு போன்ற விஷயத்துக்கு வழிவகை செய்யும். இதனால் உடல்நலம் கேள்விக்குறியாகும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் டீ மட்டுமே குறிப்பிட்ட இடைவெளியில் குடிக்க வேண்டும். இதனால் உடல் ஆற்றல் அதிகரிக்கும், ஆக்சிஜனேற்றி ஆரோக்கியப்படும். ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரை இதுவே.

இதையும் படிங்க: இந்த வகை உணவெல்லாம் சாப்பிடுறீங்களா? புற்றுநோய் அபாயம்.. எச்சரிக்கை.! 

உடலுக்கு ஆபத்து:
ஆனால், ஒருஆலைக்கு 4 முதல் 5 கப், அதற்கும் மேல் என டீ குடிப்போரின் தூக்கம் கெட்டுப்போகும். பதற்றம் உண்டாகும். இந்த பிரச்சனைகள் நாட்கள் செல்லச்செல்ல, காரணம் புரியாமல் மறைமுக அறிகுறியாக ஏற்பட தொடங்கும். வெறுமையான வயிற்றில் அதிகம் டீ குடிப்பது வாயு மற்றும் உடலில் அமிலத்தன்மையை உண்டாக்கும்.

ரத்த சோகை உண்டாகும்

டீ-காபியில் இருக்கும் டானின் எனப்படும் வேதிப்பொருள் இரும்பு சத்துக்களை உறிஞ்சும். நாளொன்றுக்கு 5 கப் மேல் டீ குடித்தால், ரத்த சோகை பிரச்சனை உண்டாகும். ஒழுங்கற்ற முறையில், அதிகம் டீ குடிப்பது இத்தய துடிப்பை சீர்குலைக்கும். முடிந்தளவு பால், பாதம் பால், மசாலா டீ எனப்படும் தேயிலை இல்லாத டீ வகைகள் போன்றவற்றை குடிக்கலாம். 

இதையும் படிங்க: மாதுளை பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? விபரம் இதோ.!