காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும்! இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்.
தமிழகத்தில் வரும் 22ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வீதிகளில் சிலை அமைத்தல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் அவர்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை விதித்து இருப்பதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் விநாயகர் சிலைகளை நிறுவி, சமூக இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும் என்றும், எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டாலும் நடத்தியேத்திருவோம் என, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.