மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எக்ஸ்பைரி டேட் முடிந்த சாக்லேட் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன்.. 24 குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!
குழந்தைகளுக்கு கொடுக்கும் எந்தவொரு பொருளையும் காலாவதி தேதி சோதிக்காமல் கொடுத்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கான சாட்சியாக கீழ்காணும் பகீர் சம்பவம் அமைந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி, சாயலாபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தினை சேர்ந்த மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் பயின்று வரும் 4ம் வகுப்பு மாணவனுக்கு நேற்று பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் நண்பர்களுக்கு இனிப்புகள் வாங்கி சிறுவன் கொடுத்துள்ளான்.
அந்த சாக்லேட் சாப்பிட்ட சிறுவர்கள் அடுத்தடுத்து வாந்தி, தலைவலியால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனைக்கண்டு அதிச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், விரைந்து செயல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் பள்ளிக்கு நேரில் வந்த மருத்துவர்கள் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் மாணவர்கள் சாப்பிட்ட சாக்லேட் கலவாதியாகிய பின்னர் விற்பனை செய்யப்பட்டது அம்பலமானது.
இதனால் காலாவதியான சாக்லெட்டை சிறுவனின் பெற்றோர்கள் எங்கு வாங்கினார்கள்? என்பது தொடர்பான விசாரணையில் நெமிலி காவல் துறையினர் களமிறங்கியுள்ளனர்.