தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! முதலமைச்சர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
திகமிழகத்தில் சென்னையில் மட்டும் நாள்தோறும் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில், சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில், முதலமைச்சர் பேசுகையில், தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்ற நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்து இருக்கிறோம். சுமார் 36 லட்சம் பேருக்கு கருணைத் தொகை கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.
அனைத்து அரிசி வாங்குகின்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கொடுக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. அதே போல் இந்த மாதமும், ஜூன் மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.