சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டாம்..எம்.பி.ரவிக்குமார்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வந்ததை அடுத்து பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
மேலும் சென்னையில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன. ஆனால், டாஸ்மாக் கடை மட்டும் இதில் விதிவிலக்காக ஊரடங்கு அமலில் இருந்த சமயத்திலேயே திறக்கப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்று மையங்களாக டாஸ்மாக் கடைகள் மாறியதையடுத்து அவை மீண்டும் சென்னையில் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை படிபடியாக குறைந்து கொண்டே வருவதால் நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் விழுப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பி.ரவிக்குமார்.
சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மீண்டும் அங்கே கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கவே வழிசெய்யும். இந்தத் தவறான முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் pic.twitter.com/lqgXhUpmBX
— Dr Ravikumar M P (@WriterRavikumar) August 17, 2020