மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல ரவுடியின் தலையை துண்டித்து கொலை செய்த மர்ம கும்பல்!!
புதுச்சேரியில் பல கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி முகிலன் மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரபல ரவுடி முகிலன் மது அருந்தும் போது பழக்கமான சித்தரச்சூர் என்னும் பகுதியை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் மூன்று தினங்களாக அதே பகுதியில் தலைமறைவாய் இருந்தார்.
பின்னர் ரவுடி முகிலன் உட்பட இன்னும் சிலர் அதே பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் மது அருந்துவதற்காக சென்றிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் முகிலனை கடுமையாக தாக்க தொடங்கியது.
அவரது தலையை வெட்டி சிதைத்து விட்டு பின், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் இதில் சம்பந்தப்பட்ட விக்கி என்கிற விக்னேஷ், கணபதி, புவனேஷ் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.