நடிகையை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்; அதிரடி காட்டிய காவல்துறை.!
இவர்களுக்கெல்லாம் ரூ.1000 பணம் கிடையாது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! விபரம் உள்ளே.!!
திமுக தேர்தல் வாக்குறுதியில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், ஆட்சிப்பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கடந்து அதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆனால், பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சமுக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட மாட்டாது என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதேபோல, அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கிகள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டமன்ற ஊழியர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் & உறுப்பினர்கள் ஒன்றிய தலைவர்கள் & உறுப்பினர்கள் ஆகியோர்களின் குடும்பத்திற்கும் ரூ.1000 பணம் கிடையாது என அறிவித்துள்ளது.