தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வரலாற்றிலே முதன்முறை.! கோவில் பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை.! துவங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.!
இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் சென்னை மண்டலத்தில் 218 பயனாளிகளுக்கு இந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழா, ராஜா அண்ணாமலைப்புரத்தில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கபாலீஸ்வரர் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பூசாரிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு கபாலீசுவரர் கோவில் சார்பாக பிரசாதமும், மாலையும் வழங்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், இந்த பேரிடர் காலங்களில் இதுபோன்று ஒரே நேரத்தில் இவ்வளவு தொகையும், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியது அறநிலையத்துறை வரலாற்றிலேயே இதுவே முதன் முறை என தெரிவித்தார்.