மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த இளைஞர்.. கணவரை ஏவி கள்ளக்காதலி பகீர் சம்பவம்.. தந்தை, மகன் பரபரப்பு கைது..!
தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடக்கூறி நடந்த பேச்சுவார்த்தையில், இறுதியில் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொல்லப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, நார்த்தன்சேடு கும்பிபாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன கவுண்டர். இவரின் மகன் சிவக்குமார் (வயது 40). இவர் காய்கறி வியாபாரியாக இருந்து வருகிறார். இப்பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவரின் மனைவி புஷ்பா (வயது 30).
சிவகுமாருக்கும் - புஷ்பாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் புஷ்பாவின் கணவருக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்து இருக்கிறார்.
ஆனால், இருவரும் தங்களின் கள்ளக்காதலை கைவிடாமல் இருக்கவே, இருதரப்பு பிரச்சனை தொடர்ந்து வந்துள்ளது. நேற்று இரவில் சிவக்குமார் தனது வீட்டின் அருகே இருந்தபோது, தங்கராஜ் & அவரின் தந்தை மாணிக்கம் சேர்ந்து சிவகுமாரிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
சிவகுமாரின் மீது கத்திகுத்தும் விழவே, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். அங்கு சிவக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழக்கவே, ஏற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ் (வயது 35), மாணிக்கம் (வயது 60) ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து தங்கராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, "சிவகுமாருக்கு எனது மனைவி புஷ்பாவோடு கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரின் கள்ளத்தொடர்பை கைவிடக்கூறி கண்டித்தேன். சிவக்குமார் எனது மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால் அவரை கண்டிப்பதற்கு நானும், தந்தையும் சென்று கண்டித்தோம். அவர் நாங்கள் கூறுவதை கேட்காமல் பதில் வாக்குவாதம் செய்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இறுதியில் கொலை நடந்தது. காவல் துறையினரிடம் தற்போது சிக்கிக்கொண்டோம்" என்று தெரிவித்துள்ளார்.