மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனுக்கு ஜாமின் கிடைக்காத விரக்தியில், 6 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை முயற்சி.. சேலத்தில் பகீர்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர், காத்தாய் அம்மாள் நகரில் வசித்து வருபவர் கோபால் (வயது 34). இவரின் மனைவி மரகதம் (வயது 29). இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் என 6 பிள்ளைகள் உள்ளனர். இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தனது 6 பிள்ளைகளுடன் மரகதம் வந்துள்ளார்.
பின்னர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக செயல்பட்டு மரகதத்தை கைப்பற்றினர். மேலும், அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவரின் மீது தண்ணீரை ஊற்றினர்.
அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்த போது, தனது கணவர் கோபாலை கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்னதானப்பட்டி காவல் துறையினர் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். அவரை நீதிமண்டத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், அவரை ஜாமினில் பலமுறை வெளியே எடுக்க முயற்ச்த்தும் பலனில்லை.
இதனால் கணவருக்கு ஜாமீன் கிடைக்காத விரக்தியில், நானும் - எனது குழந்தைகளும் தற்கொலை செய்ய முடிவெடுத்து இங்கு வந்துள்ளோம். எனது கணவர் வேண்டும். அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.