#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சந்தனமரக்கடத்தல் வீரப்பனின் சகோதரருக்கு 7 நாட்கள் பரோல் அனுமதி.!
வீரப்பனின் சகோதரர் மாதையனுக்கு 7 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் (வயது 87). இவர் கொலை மற்றும் குற்றவழக்கில், கடந்த 1987 ஆம் வருடம் கைது செய்யப்பட்டார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி இருந்தது.
இதனால் கடந்த 35 வருடமாக மாதையன் சிறையில் வாழ்ந்து வரும் நிலையில், முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மாதையன், பின்னாளில் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் மாதையன், பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், மாதையனுக்கு 7 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 7 நாட்களுக்கு பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை, அவரின் மருமகன் முனுசாமியுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.