கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பெண்களை இழிவாக பேசியதற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.! முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா கடும் கண்டனம்.!
பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாகவும், சர்ச்சை குறித்த கருத்துக்களை பேசியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த அஷ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா தொல் திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இந்து பெண்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
திமுகவில் கடவுளை வழங்கும் இந்து பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அப்படி எனில் திருமாவளவனின் இந்த பேச்சு அவர்களையும் இழிவுபடுத்துவதாக ஆகும். எனவே திருமாவளவனின் அநாகரிகமான பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவேண்டும். அதேபோல் திருமாவளவனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.