தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பள்ளி மாணவர்களா? சாதி வெறியர்களா? சாதிச்சண்டையான வாய்தகராறு..! இரண்டு கிராமமே மோதல்..!
பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தகராறு, கிராமத்தில் இரு தரப்பு மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அடுத்த திருத்துறையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கயப்பாக்கம் மற்றும் வேலங்காடு ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் இரு பிரிவாக சண்டையிட்ட நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவல் கயப்பாக்கம் மற்றும் வேலங்காடு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியவரவே, இரு கிராமத்தை சேர்ந்தவர்களும் தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தங்கள் ஊருக்குள் புகுந்த எதிர்தரப்பினரை தடுப்பதற்காக பெண் ஒருவர் இளைஞரின் சட்டையை பிடித்து கடுமையாக தாக்கவே, அவருக்கு ஆதரவாக உள்ளூர் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கையில் மரக்கட்டைகளை எடுத்து அடித்து விரட்டியுள்ளனர்.
இவ்வாறு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டபோது, கிராமத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் சாய்க்கப்பட்டுள்ளது. இரு கிராம மோதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்டவர்களை வீடியோ ஆதாரத்தின் மூலம் தேடி வருகின்றனர். இரு கிராமத்தினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் படிப்பதில் கவனம் காட்டாமல், இது போன்ற இருதரப்பினரின் கலவரங்களில் கவனம் செலுத்துவதால் வீணான மோதல் ஏற்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.