பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் 300 வாக்குகள் பெற்றேன்..! என்னை அடிக்க வராங்க... கதறும் வேட்பாளர்.!
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தநிலையில், வேலூர் மாநகராட்சி கொனவட்டம் பகுதி 32 வது வார்டில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சுல்தான் பாஷா என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்தநிலையில், இவர் 300 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்தநிலையில், அவர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நான் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட மக்களுக்கு கொடுக்காமல் மாநகராட்சித் தேர்தலில் 300 வாக்குகள் பெற்று நான் தோல்வி அடைந்து விட்டேன். தேர்தலுக்கு முன்பு திமுகவினர் தன்னை வாபஸ் வாங்க சொன்னதாகவும் அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் தற்பொழுது வேலூர் அடுத்த கொனவட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு திமுகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தன்னை தாக்க வருவதாக கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.